77 ஆண்டுகள் ....மலையகத் தமிழர்களின் வாழ்வு மாறவில்லை
இலங்கையில் குடியிருப்பு பறிப்பு சட்டம் அமுலுக்கு வந்து இன்றுடன் 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 1949 ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் பறிபோனது.
இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் குடியுரிமை இழந்து நாடற்றவர்களாக்கப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று 7 தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம்
மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், பொறுப்புகூறல் இடம்பெறவில்லை என்பது உண்மையாகும்.
3 தசாப்தகால புறக்கணிப்புக்கு மத்தியில் மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் 2002 காலப்பகுதியிலேயே அப்பிரச்சினை முழுமையாக தீர்ந்தது.
குடியுரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு இன்னும் அடிப்படை உரிமைகள் கூட முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.
மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம் தற்போது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் காணி உரிமை அற்றவர்களாகவே இன்னும் வாழ்கின்றமை கசப்பான உண்மை.