லங்கா IOC நிறுவனமும் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை மாற்றங்களுக்கு நிகராக, லங்கா IOC நிறுவனமும் தமது விலையை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை தலா 2 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
இந்த விலைக்குறைப்பைத் தொடர்ந்து, ஒரு லீற்றர் பெட்ரோல் 92 ஒக்டேனின் புதிய விலை 292 ரூபாவாகவும், ஒட்டோ டீசலின் புதிய விலை 277 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெட்ரோல் 95 ஒக்டேன் விலை 340 ரூபாவாகவும் சுப்பர் டீசல் விலை 323 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் விலை 182 ரூபாவாகவும் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.