குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோடன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
உடபுஸ்ஸலாவை பிரதேசத்தில் கடந்த தினங்களாக காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.
பாரிய சேதம்
இந்த நிலையில் நேற்றைய தினம் (2023.11.22) கடும் மழையினால் கோடன் தோட்டப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு மேற் பகுதியில் காணப்படும் பாரிய மண்மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது மண்மேட்டில் இருந்து பாரிய கற்கள் குடியிருப்பின் ஒரு பகுதி சுவர் மீது சரிந்து வீழ்ந்து குடியிருப்புக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் குடியிருப்பு, தளபாடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் பௌத்த பிக்குகள் குடியிருப்பில் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்கள் ஏற்படவில்லை என உடபுஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்