பதுளையில் தொடரும் மண்சரிவு அபாயம்; மக்கள் வெளியேற்றம்
பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரஹாத் அபேவர்தன இன்று (11) தெரிவித்துள்ளார்.
அதன்படி 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேஇ இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் மண்மேடுகள் சற்று முன்னோக்கி சரிந்து காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (10) தெரிவித்திருந்தது.
இதனால், மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மேலும் 238 குடும்பங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை இடம்பெயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.