6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை ; தொடரும் சீரற்ற காலநிலை
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பதுளை, களுத்துறை, குருணாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் சீரற்ற காலநிலை நிலவும் போது விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி மக்கள் சாத்தியமான இயற்கை அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் முதலமைச்சர் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் எனவும், மழை தொடரும் பட்சத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பொலிஸார் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.