இலங்கையில் இந்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கையில் அண்மைக் காலமாக நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக, பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளையில் உள்ள எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டியில் உள்ள உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குருநாகலில் உள்ள மாவத்தகம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல பல்லேகம ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியாவில் உள்ள ஹகுரன்கெத்த, இரத்தினபுரியில் உள்ள கலவானை மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மற்றும் பண்டாரவளை பிரதான வீதியில் மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலை (10-12-2023) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.