இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் ; இலங்கையர்களுக்கு நேர்ந்த துயரம், பொறுப்பற்ற செயலால் விபரீதம்
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கைபேசிகளில் காணொளி எடுக்க முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
ஏவுகணை தாக்கியதைத் தொடர்ந்து அருகிலிருந்த கட்டிடங்களிலிருந்து சிதறிய கண்ணாடிகளால் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழர் பகுதியில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்
ஏவுகணைத் தாக்குதலுக்குச் சுமார் மூன்று நிமிடங்களுக்கு முன்பு வழக்கமாக ஒலிக்கப்படும் எச்சரிக்கை சைரன்களைக் கேட்டவுடன், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் உடனடியாக நியமிக்கப்பட்ட தங்குமிடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலவி வரும் பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியில், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.