13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை தொடர்ந்து 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, பதுளை, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, ஹொரண, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் தொலுவ, யட்டிநுவர, பஸ்பாகே கோரளே, உடபலாத்த, தொல்தொட்ட, கங்கா இஹல கோரளே, அக்குரண, பாத்தஹேவாஹெட்ட, பன்வில மற்றும் கங்காவட்ட கோரளே பிரதேச செலளாலர் பிரிவுகளுக்கும்,குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல,
அலவ்வ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், கலவான, பெல்மதுல்ல, குருவிட்ட, கிரியெல்ல, எஹலியகொட, இரத்தினபுரி மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.