நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (25) இரவு 9:00 மணி முதல் நாளை இரவு 9:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பதுளை மாவட்டம் - ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல,
பதுளை, லுனுகல காலி மாவட்டம் - பத்தேகம, எல்பிட்டிய, நாகொட
களுத்துறை மாவட்டம் - புலத்சிங்கள,
கண்டி மாவட்டம் - உடுதும்பர, உடபலாத, தெல்தோட்டை, ககவடகோரளய
கேகாலை மாவட்டம் - புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை
மாத்தளை மாவட்டம் - அம்பங்கக கோரலய, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, லக்கல பல்லேகம, நாவுல, மாத்தளை
மாத்தறை மாவட்டம் - பிட்டபெத்தர
நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ, ஹகுரன்கெத்த, வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம் - இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, கஹவத்த