நான்கு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது.
இதன்படி, இன்று (09) மாலை 4.00 மணி முதல் நாளை (10) மாலை 4.00 மணி வரை குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை எச்சரிக்கை - கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் நிலை எச்சரிக்கை - கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, ஹதரலியத்த; கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, கேகாலை, ரம்புக்கன, யட்டியந்தோட்டை, அரநாயக்க, வரகாபொல; குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, அயகம, எஹலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, கலவான, இம்புல்பே மற்றும் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.