மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கையைப் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (15) மாலை 4.00 மணி முதல் நாளை (16) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன,

கொழும்பு- சீதாவக்க , காலி- நெலுவ களுத்துறை- அகலவத்த, மதுகம, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர
கண்டி- கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, பாதஹேவாஹெட்ட, யடிநுவர, தொலுவ, உடபலாத, பன்வில, அக்குரணை குருணாகல்- அலவ்வ, நாரம்மல
இரத்தினபுரி- பெல்மதுளை, இரத்தினபுரி, எஹலியகொடை, அயகம, குருவிட்ட, கிரிஎல்ல, கலவானை
மேலும், முதலாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன
பதுளை- பண்டாரவளை, ஹாலிஎல, பசறை
கொழும்பு- பாதுக்கை காலி- தவலம, எல்பிட்டிய, நியாகம
கம்பஹா- அத்தனகல்ல
களுத்துறை- இங்கிரிய, புலத்சிங்கள
கண்டி- மெததும்பறை, உடுதும்பறை, பூஜபிட்டிய, தும்பனை, ஹத்தரலியத்த, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர
கேகாலை - மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, கேகாலை, ரம்புக்கனை, வரகாபொல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல
குருணாகல்- ரிதீகம மாத்தளை- நாவுல, அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை
மாத்தறை- பிடபெத்தர மொனராகலை- படல்கும்புர, வெல்லவாய, பிபிலை நுவரெலியா- நோர்வூட், அம்பகமுவ கோரளை, கொத்மலை
இரத்தினபுரி- எலபாத, கொடகவெல, கஹவத்த, நிவித்திகலை