12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டம் 1 (எச்சரிக்கை) மற்றும் கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்,
காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள
கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்,
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
காலி மாவட்டம்: தவலம