சவுதியில் அனோஜனின் மரண தண்டனை; ஹட்டனில் போராட்டம்
சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குமாறு கோரியும், "மனிதாபிமான வேண்டுகோள்" எனும் தலைப்பில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
கொட்டும் மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.