ஏற்படவுள்ள பெரும் ஆபத்து தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 334 அணுகுண்டுகளை போல சக்தி வாய்ந்தது என அமெரிக்க புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கங்கள்
334 அணுகுண்டுகள் அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கங்கள் பெரும் அழிவை தரக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த நாட்டில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான நய்பிடாவில் (Naypyidaw) நேற்று (30) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள்
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இதுவரை, 1,600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 3,400 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.