யாழில் காணி மோசடியில் சிக்கிய சட்டத்தரணி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
காணி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ் நகரை அண்மித்த பகுதியில் போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டு, காணி மோசடி இடம்பெற்றிருந்தது.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா,
பொலிசாரின் விசாரணையில் சந்தேகம்
பொலிசார் வழக்கு விசாரணையில் பாரபட்சம் காண்பிப்பதாகவும், இந்த மோசடியில் பலர் தொடர்புபட்டுள்ளதாகவும், மோசடி ஆவணம் தயாரிக்கப்பட்டதென்றால் அதனுடன் தொடர்புடைய சட்டத்தரணி கைது செய்யப்பட்டாரா என கேள்வியெழுப்பியதுடன், பொலிசாரின் விசாரணையில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, வழக்கு விபரங்களை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்குடன் தொடர்புடைய பலர் கைதாகியிருந்தனர்.
யாழ் பிரபல கல்லுாரியின் முன்னாள் அதிபர் ஒருவரும் , சட்டத்தரணி உள்ளிட்ட 9 பேரும் கைதாகினர். இந்த நிலையில், சட்டத்தரணி சார்பில் நேற்றையதினம் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்தேகநபரான சட்டத்தரணியை பிணையில் விடுவித்தது.