கோடீஸ்வர வர்த்தகரான லலித் கொத்தலாவலயின் மரணத்துக்கான காரணம் வெளியானது
கோடீஸ்வர வர்த்தகரான லலித் கொத்தலாவலயின் மரணத்துக்கு சளி மற்றும் நிமோனியா அதிகரித்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்க்ஷ உள்ளிட்ட மூவர் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை (23) நடத்திய பிரேத பரிசோதனையின்போது இது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
லலித் கொத்தலாவலயின் மரணம் சந்தேகத்துக்குரியது என குடும்ப உறவினர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பிரகாரம் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்ததால் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மூன்று நிபுணர்கள் அடங்கிய தடயவியல் அதிகாரிகள் குழு மூலம் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.