இந்த ராசியில் உருவாகப்போகும் லட்சுமி நாராயண யோகம்: ஜூலையில் மாறப்போகும் இந்த 3 ராசிகளின் தலைவிதி
எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியில் நுழைந்த சில நாட்களிலேயே, அதாவது ஜூலை 23 ஆம் தேதி வக்ர நிலையில் கடக ராசிக்கு செல்கிறார்.
இதேவேளை, புத்திகாரகனான புதன் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் ஜூலை மாதத்தில் கடக ராசியின் புதன் சுக்கிரன் சேர்க்கையால் மங்களகரமான லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், மூன்று ராசிக்காரர்களின் தலைவிதி இந்த யோகத்தால் மாறப் போகிறது.
அதாவது ஏராளமான நற்பலன்களையும், நிதி ஆதாயங்களையும் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நிதி ரீதியாக இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பணத்தைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பேச்சால் சமூகத்தில் உயர் நிலையில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஊடகம், மார்கெட்டிங் போன்ற பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். இதனால் இந்த யோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்குவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் விரும்பிய இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள் மற்றும் அவர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.