தீபாவளி தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்வதால் கிடைக்கும் அளப்பரிய பலன்கள்!

home dewali Lakshmi Kubera Puja
By Sulokshi Nov 04, 2021 04:21 AM GMT
Report

தீபாவளி திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.

அதில் மிக முக்கியமானது லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும்.

இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.

லட்சுமி குபேர பூஜை செய்யும்முறை :

லட்சுமி குபேர பூஜை வீட்டில் செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும்.

நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.

அதன் பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பிக்கலாம் . விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும்.

அதன்பின் குபேர மந்திரங்களான “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜிக்க வேண்டும்.

தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர். நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும்.

அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். தீபாவளி தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி நமக்கு வழங்கிடுவார்.

தீபாவளி தினத்தில்   லட்சுமி குபேர பூஜை  செய்வதால் கிடைக்கும் அளப்பரிய பலன்கள்! | Lakshmi Kubera Puja On Deepavali

குறைவற்ற செல்வம் வழங்கும் குபேரன் :

திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் குபேரர். தந்தையார் விஸ்வரஸ், தாயார் சுவேதாதேவி. சிறந்த சிவ பக்தனாகிய குபேரன் இந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணித்த பெருமை பெற்றவர்.

சிவனின் அருள்பெற்று அளகாபுரிக்கு அரணாக விளங்கிய குபேரன் வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்கிறார். குபேரன் திருமுத்துகுடையான் கீழ் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு அபயமுத்திரையுடன் அமர்ந்திருக்கிறார்.

அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருப்பர். அவர் தன் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளையும் குபேரன் வைத்திருப்பார். இத்தகைய சிறப்புமிக்க குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார்.

தீபாவளி தினத்தில்   லட்சுமி குபேர பூஜை  செய்வதால் கிடைக்கும் அளப்பரிய பலன்கள்! | Lakshmi Kubera Puja On Deepavali

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌ :

அதிகாலை 04.00 மணி முதல்‌ 06.00 மணி வரை காலை 09.13 மணி முதல்‌ 10.43 மணி வரை பிற்பகல்‌ 01.13 மணி முதல்‌ 01.28 மணி வரை மாலை 06.00 மணி முதல்‌ 07.00 மணி வரை இரவு 08.00 மணி முதல்‌ 09.00 மணி வரை பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும்.

பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள்‌ :

இந்த பூஜையை செய்வதால்‌ வீட்டில்‌ நிச்சயம்‌ பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம்‌ பெருகும்‌. வீட்டில்‌ நிம்மதியும்‌, சந்தோஷமும்‌ நிலைக்கும்‌. மகாவிஷ்ணுவின்‌ மார்பில்‌ வாசம்‌ செய்யும்‌ மகாலட்சுமி தீபாவளி தினத்தில்‌ நமது இல்லம்‌ தேடி வந்து அருள்பாலிக்கிறாள்‌.

தீபாவளி தினத்தில்   லட்சுமி குபேர பூஜை  செய்வதால் கிடைக்கும் அளப்பரிய பலன்கள்! | Lakshmi Kubera Puja On Deepavali

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால்‌ சங்கடங்கள்‌, காரியத்தடைகள்‌ நீங்கும்‌. கடன்‌ பிரச்சனைகளில்‌ இருந்து விடுபடலாம்‌. இல்லத்தில்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பதுடன் குபேரன்‌ சகல ஐஸ்வர்யத்தையும்‌ வாரி வழங்கிடுவார்‌.

மேலும் லட்சுமி குபேர பூஜை செய்வதனால் மகாலட்சுமியின்‌ திருவருளால்‌ அனைத்து செல்வங்களும்‌ அதாவது தனம்‌, தானியம்‌, மக்கட்‌ செல்வம்‌, வீடு, தைரியம்‌, வீரம்‌, அறிவு என அனைத்தையும் நாம் ‌ பெற முடியும்‌.   

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US