டிராக்டர் விபத்துக்குள்ளானதில் பல தொழிலாளர்கள் காயம்
தலவாக்கலை, லோகி தேயிலை தொழிற்சாலை அருகே, தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்று (02) மாலை பணி முடிவடைந்த பின்னர், தொழிலாளர்கள் டிராக்டரின் பின்புற ட்ரெய்லரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வாகனத்தின் கட்டுப்பாடு இழந்ததால் அது கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

“தோட்டத் தொழிலாளர்களின் உயிர்களை இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் ட்ராக்டர் வாகனங்களில் கொண்டு செல்லும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையான போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்,” என தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.