குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தவறியும் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்
நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் குடல் ஆரோக்கியத்தை முறையாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் நமது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநலனில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்முடைய வயிற்றின் செயல்பாட்டை மிக மோசமாக பாதிக்கின்றன. அவ்வாறான உணவுகள் குறித்து பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட உணவுகள் சாப்பிடுவதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருந்தாலும், அதில் பல சேர்க்கைப் பொருட்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகியவை உள்ளன. இவை நம் குடலில் உள்ள நுண்ணுயிரின் சமநிலையை பாதித்து செரிமானக் கோளறுகளையும் வீக்கத்தையும் உண்டாக்குகிறது. ஆகையால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஸ்னாக்ஸ்களை கூடுமானவரை தவிர்க்கவும்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
நாம் சாப்பிடும் பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பான்ங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இவை நம் குடல் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால் மிட்டாய்கள், இனிப்புகள், சோடா பானங்கள், பேக்கரி பொருட்கள் அகியவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்
வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகள் மிகவும் சுவையாக இருந்தாலும் இதில் நம் குடல் பாக்டீரியாக்களை பாதிக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. அடிக்கடி வறுத்த உணவுகளை சாப்பிடுவதால் குடலில் வீக்கம் உண்டாகும். இது நாளடைவில் செரிமானப் பிரச்சனைகளையும் மற்ற உடல்நலப் பிரச்சனைகளையும் வரவழைக்கும்.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியில் அதிகளவு புரதமும் ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அடிக்கடி சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிக்கும். எனவே லீன் புரோட்டீன் நிறைந்த சிக்கன், மீன், தாவர அடிப்படையிலான புரத உணவுகளை சாப்பிடுங்கள்.
கஃபைன்
கஃபனை அளவாக எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதுதன் என்றாலும் அதிகப்படியாக சாப்பிட்டால் குடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக கஃபைன் உடலில் சேரும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை வருகிறது.
செயற்கை இனிப்பூட்டிகள்
சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தி வந்தாலும் இது குடலில் உள்ள பாக்டீரியா சமநிலையை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தினால் செரிமானப் பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் இயற்கை இனிப்பூட்டிகளான தேனை பயன்படுத்துங்கள்.
ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS)
அதிக ஃப்ரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப்பை பருகுவதால் குடலில் உள்ள பாக்டீரியா சமநிலை பாதிக்கப்பட்டு அழற்சியை உண்டாக்குகிறது. எப்போதும் உணவு பாக்கெட்டுகளின் லேபிளை வாசித்து பொருட்களை வாங்கவும். ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் இல்லாத பொருட்களை வாங்குங்கள்.