பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற குருந்தூர்மலை விசேட பொங்கல் வழிபாடு!
முல்லைத்தீவு - குருந்தூர்மலை பிரசித்திப்பெற்ற ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்றைய தினம் (18-08-2023) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பொங்கல் நிகழ்வுகளை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கு அமைவாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல்லு வைத்து அதன்மேல் தகரம் வைத்து அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினார்கள்.




