குருந்தூர்மலையில் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் பொதுமக்கள்!
குருந்தூர்மலையின் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் பொங்கல் நிகழ்விற்காக சென்ற மக்கள் அனைவரும் பொலிஸாரினால் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் (18-08-2023) குமுழமுனை ஊடாக தண்ணிமுறிப்பு செல்லும் வீதியில் அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் பயணிக்கும் அனைவரும் பொலிஸாரினால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 300 வரையான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனைவிட சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொண்ட விகாரை அமைந்துள்ள பகுதியினை சுற்றி அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆதிசிவன் ஆலய பொங்கலுக்கு சென்ற பக்த்தர்களை சுற்றியும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.