வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?
இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று வெடித்ததுடன், மற்றொன்று வெடிக்காமல் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உலகக் குழுவின் தொடர்புகள்...
நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருமாடி வீடொன்றின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலினால் வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன. வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.
ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன