பிரதமர் அறிக்கைக்கு கடும் சினத்தை வெளியிட்ட குமார் சங்கக்கார!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் இன்று கொழும்பில், நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ள குமார் சங்கக்கார, தங்களது அடிப்படைத் தேவைகைள் மற்றும் உரிமைகளைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, அரசாங்கத்தில் உள்ள குண்டர்கள் மற்றும் குண்டர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
The only violence was perpetrated by your “supporters” - goons and thugs who came to your office first before going on to assault the peaceful protestors. https://t.co/MxrCgcenEl
— Kumar Sangakkara (@KumarSanga2) May 9, 2022
அதேப்போல் இந்தச் சம்பவம் அருவருப்பானது என்பதுடன் திட்டமிட்ட ஒன்று என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பிரதமர் விடுத்துள்ள அறிக்கைக்கும் குமார் சங்கக்கார கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
.