5 லட்சம் லஞ்சம் கேட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர்; அதிரடி காட்டிய இலஞ்ச ஆணை குழு!
திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது

அலுவலகத்தில் இலஞ்ச பணம்
5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடம்போடை என்ற கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றிற்கான அளிப்பு பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி இப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பிரதேச சபைத்தலைவர் இன்று காலை குச்சவெளி பிரதேச சபையில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து இலஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.
அதனை அடுத்து குறித்த காணிக்கு பணம் பெற்றவருடன் இவர் சென்ற போது அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.
தற்போது நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இவர் அங்கு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.