சொன்ன சொல்லைக் காப்பாற்றாத கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடமிருந்து இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய நேற்று பதவி விலகுவதாக 9ஆம் திகதி அறிவித்ததுடன் தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.
அத்தோடு அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் சபாநாயகர் நேற்று ஜனாதிபதியின் ராஜினாமாவை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது.
இத்தோடு ஊடகங்களுக்கு ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் அறிக்கை விடுத்துள்ளார்.
அதன்பின்னர் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்று கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைப்பதில் மேலும் தாமதமாகலாம் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.