சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்று கொல்கத்தா அணிக்கு 199 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்துள்ளது.