கோடைக்காலத்தில் உடல் சூட்டை குறைக்க வேண்டுமா? இதை மறக்காம எடுத்துகோங்க
வெப்பத்தின் கடும் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் கோடைகாலத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உடல் மற்றும் சருமம் இரண்டையும் இந்த கோடையில் ஆரோக்கியமாக வைத்திருக்க ப்ரோக்கோலியில் இருக்கும் நன்மைகைள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
கோடை காலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் நீங்கள் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் தாராளமாக ப்ரோக்கோலியை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பொதுவாக அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள் வெப்பம் மிகுந்த காலத்தில் நம் உடலை புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. அந்த வகையில் ப்ரோக்கோலியில் சுமார் 92% தண்ணீர் உள்ளதால் உங்கள் எனர்ஜி லெவலை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
அழற்சியை குறைக்கும்
வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இந்த சத்தான ப்ரோக்கோலியில் அதிகம் உள்ளன. இவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. தவிர இந்த காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அழற்சியை குறைக்கின்றன மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை நீக்க கூடும்.
சரும ஆரோக்கியம்
நம் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்ல, சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்கவும் ப்ரோக்கோலி உதவுகிறது. ஏனென்றால் ப்ரோக்கோலி கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. எனவே ப்ரோக்கோலியை கோடை காலத்தில் எடுத்து கொள்வதால் பொலிவான சருமத்தை பெறலாம்.
எளிதில் ஜீரணமாகும்
ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருக்கிறது. எனவே செரிமான அமைப்பில் இந்த உணவு எளிதாக சென்று ஜீரணமாகிறது. தவிர ப்ரோக்கோலியில் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சில நொதிகள் (enzymes) உள்ளது குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்பு சக்தி
ப்ரோக்கோலியில் காணப்படும் வைட்டமின்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைப்பதன் மூலம் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் இதில் சல்ஃபோராபேன் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன.
ஹைட்ரேட்டாக வைக்கிறது
வெயில் காலத்தில் நம் உடலின் நீர்சத்து அளவை பராமரிப்பது மிக முக்கியமானது, ஏனெனில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் எளிதில் நீரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் சம்மர் டயட்டில் ப்ரோக்கோலியை சாப்பிடும் போது உங்கள் உடலுக்கு கூடுதல் ஹைட்ரேஷன் கிடைக்கும்.
குடல் ஆரோக்கியம்
இந்த காய்கறியில் அதிக நார்ச்சத்து அடங்கி உள்ளது. எனவே கோடையில் இந்த காயை எடுத்து கொள்வது உங்களுக்கு வயிறு சார்ந்த சிக்கல்கலை ஏற்படுத்தாது. ப்ரோக்கோலி நம் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது, எனவே இந்த பச்சை காய் வயிற்று பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும்.