கொச்சிக்கடை முதல் யாழ்ப்பாணம்: சாதனைப் படைத்த முதியவர்!
Jaffna
Cycling
Sri Lankan Peoples
By Shankar
துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு - கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை 24 மணித்தியாலத்துக்கும் குறைந்த நேரத்தில் பயணித்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
67 வயதுடைய ரிச்சட் பெர்ணான்டோ என்ற முதியவரே குறித்த சாதனை பயணத்தை முன்னெடுத்தார்.
நேற்று (25-11-2023) மதியம் 12 மணியளவில் அவர் தமது பயணத்தை ஆரம்பித்து இன்றையதினம் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அவர், தமது பயணத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US