குழு மோதலில் குடும்பஸ்தர் பலி; சகோதரரும் மனைவியும் காயம்
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பதுளை, எகொடபிட்டிய, பத்தனேகெதர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சகோதரரும் மனைவியும் வைத்தியசாலையில்
சம்பவத்தில் தம்பகஹாவத்தை, கல்கொடுவேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரரும் அவரது மனைவியும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் இருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களை , கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.