யாழில் வாயில்லா ஜீவன்களை கொன்று வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்த விசமிகள்
யாழில் வீடொன்றுக்குள் நுழைந்த காடையர்கள் வீட்டிலிருந்த வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை கொன்றதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் யாழ்.பருத்துறை - சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆலயத்திலிருந்து அதிகாலை வீடு திரும்பிய நிலையில் வளர்ப்பு நாய் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததுடன் புறாக் கூட்டை சேதப்படுத்தி புறாக்கள் சில கொலை செய்யப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
