அரச பேருந்து மோதி மௌலவி ஒருவர் பலி
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்றையதினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம்
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச போக்குவரத்து பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பயணித்த மௌலவி உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.