கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பேருந்துக்காக காத்து நின்றவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்மூலம் பல நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மாவட்ட தொற்றா நோய்ப்பிரிவின் வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் 15ம் திகதி வரை உலக நீரிழிவு வாரமாக பிரகடனப்படுத்தி நோயாளர்கள் இனங்காணப்படவுள்ளனர்.
கண்டாவளை வைத்திய அதிகாரி பிரிவில் குறித்த வாரத்தில் 8.30 மணி வரை மக்கள் பரிசோதனையை மேற்கொண்டு தமது நீரிழிவு நோய் நிலைமையை அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.