தமிழர் பகுதியில் பயங்கர சம்பவம்: கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை திருட்டு!
கிளிநொச்சி - பெரியகுளம் பகுதியில் வீட்டு உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த பணம், நகைகளை திருடர்கள் கொள்ளையிட்டு சென்ற அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டு உரிமையாளரை கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி வீட்டுக்குள் தள்ளி, வீட்டின் இருந்த முதியவர் இருவரையும் கறிற்றால் கட்டி தனி அறையில் அடைத்து விட்டு அங்கிருந்த இரண்டு பவுன் தங்க நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இதேவேளை, வீட்டிலிருந்த மற்றும் இரு துவிச்சக்கர வண்டி என்பன திருட்டு போய் உள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.