நபரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை
நபரொருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வெட்டி வாயில் சுட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கடுவலை வெலிப்பில்லவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த கட் இஷார என்ற நபர் கொலன்னாவ நாகஹமுல்ல வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கார், வாள், கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம்மாதம் 26 ஆம் திகதி கடவத்தை பியன்வில மங்கட வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொலன்னாவ நாகஹமுல்ல வீதி பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கடுவலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.