2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP!
அநுர அரசின் அதிரடியில் 2025 ஆண்டில் பல முக்கிய பிரபலங்களின் கைது இலங்கை வரலாற்றில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அநுர அரசின் அதிரடியில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் முன்னாள் ஜனாதிபதி முதல் பல நாட்டின் முக்கிய உயர்மட்ட தலைமைகள் பலர் கைது செய்யப்பட்டதுடன் பலர் சிறைவாசம் சென்ற முக்கிய ஆண்டாக இந்த 2025 சாதனை படைத்தது. அதன்படி இலங்கையை ஆட்டிப்படைத்த கைதுகளின் பட்டியல் கீழே,

முக்கிய கைதுகளின் பட்டியல்
2025 ஜனவரி மாதம்
யோஷித ராஜபக்ச (நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டு)
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (சட்டவிரோதமான வாகனம் வைத்திருந்தமை)
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா (அரச நிதியை முறைகேடு)
உதயங்க வீரதுங்க ( தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு)
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (பொலிஸாரின் கடமைக்கு இடையூறு) போன்றோர் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 பெப்ரவரி மாதம்
சாந்த அபேசேகர (சட்டவிரோதமான வாகனம் வைத்திருந்தமை)
குலசிங்கம் திலீபன் (போலி முகவரிச் சான்றுகளைப் பயன்படுத்தி இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றமை) போன்றோர் பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.
2025 மார்ச் மாதம்
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் (துப்பாக்கிச்சூடு ஒன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது)
சாமர சம்பத் தசநாயக்க (நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டு) போன்றோர் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 ஏப்ரல் மாதம்
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) (கடந்த கால மனித உரிமை மீறல்கள்) ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

2025 மே மாதம்
கெஹலிய ரம்புக்வெல்ல, ரமித்த ரம்புக்வெல்ல (அரச நிதி முறைகேடுகள்) மே மாதம் கைது செய்யப்பட்டதுடன்,
மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
2025 ஜூன் மாதம்
கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர்- கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்

2025 ஜூலை மாதம்
எஸ்.எம். சந்திரசேன (சோள விதைகளை முறையற்ற விதத்தில் விநியோகித்த குற்றச்சாட்டு) ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்டார்.
2025 ஓகஸ்ட் மாதம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை) குறித்த கைது இலங்கையில் மட்டுமின்றி உலக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.
ஷசீந்திர ராஜபக்ச (ஊழல் குற்றச்சாட்டு),
ராஜித சேனாரத்ன (மணல் அகழ்வு ஊழல் மோசடி),
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா போன்றோர் ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 நவம்பர் மாதம்
ஜயம்பதி சரித ரத்வத்த(ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்),
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க போன்றோர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
2025 டிசம்பர் மாதம்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை)
டக்ளஸ் தேவானந்தா (பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷிடம் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரம்) போன்றோர் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய பல முக்கிய கைதுகள் இலங்கையின் அரசியலில் முக்கிய பேசுபொருளாகி இருந்தன. இவை இவ்வாறிருக்க எதிர்வரும் வருடத்தில் ஊழலில் திளைத்த பல முக்கிய அரசியல் தலைமைகள் எதிர்காலம் குறித்து காலம் பதில் சொல்லும்...