ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி ; வினோதமான பூஜைகளால் பீதியில் உறைந்த கிராமம்
திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தீவிர விசாரணை
கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.