கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் கைது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்றமை குறித்து கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் சார்ஜன்ட் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்றைய தினம் (25-02-2023) கைது செய்யப்பட்டிருந்தனர்.
போலியான பெயரில் டுபாய்க்கு செல்ல முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.