அயன் பட பாணியில் இலங்கை விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம்! சிக்கிய மர்மம்
உகாண்டா பிரஜை ஒருவர் பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதான உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளார்.
சந்தேகநபரின் வயிற்றை பரிசோதனை செய்த போது கொக்கெய்ன் அடங்கிய 17 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொக்கேய்னின் சந்தை பெறுமதி சுமார் 12 மில்லியன் ரூபா என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிரபல தமிழ் படமான அயன் படத்தில் இடம்பெற்ற காட்சியை போன்று இடம்பெற்றுள்ளது.