கதிர்காமத்திற்கு சென்ற பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு!
கதிர்காமம் வழிபாட்டு ஸ்தலத்திற்கு சென்றிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, கதிர்காமத்திற்கு வழிபாட்டிற்காக 18 பேர் அடங்கிய பல்கலைக்கழக மாணவர் குழு சென்றுள்ளது.
இந்நிலையில், வழிபாட்டிற்காக சென்றுகொண்டிருந்த போது திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனை கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார். தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை - உஸ்மதுலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயில்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.