ஶ்ரீ கதிர்காம தேவாலயத்திற்குரிய 300 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதா?
கண்டி, ஶ்ரீ கதிர்காம தேவாலயத்திற்குரிய சொத்துக்களில் சுமார் 300 ஏக்கர் காணியை விற்பனை செய்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் தவறான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி கதிர்காம தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக நிலமேயும், சப்ரகமுவ பொல்துவ ஶ்ரீ சமன் தேவாலய முன்னாள் பஸ்நாயக நிலமேயுமான கெமுனு வலிசுந்தர தெரிவித்தார்.
எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.ட் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று தசாப்த காலமாக சமய, கலாச்சார விடயங்களில் நான் முன்னெடுத்து வரும் பணிகளுக்கும், நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சிலர் மேற்கொள்ளும் மேற்படி விஷமப் பிரச்சாரத்தை நான் முற்றாக மறுக்கிறேன்.
வெகு விரைவில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். கண்டி கதிர்காமம் கோவிலில் தான் பஸ்நாயக்க நிலமேயாக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை.
இரத்தினபுரி ஶ்ரீ சமன் தேவாலய பஸ்நாயக்க நிலமே பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள இந்த நேரத்தில் இப்படியான ஒரு பிரசாரம் முன் எடுக்கப்படுவது ஏன் என்பது எவருக்கும் இலகுவில் புரியக்கூடிய ஒன்று.
வரலாற்று புகழ் மிக்க பெரஹராக்கள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் விகாரைகள் ஆதன சட்டத்தின் கீழ் உள்ள சொத்துக்களைப் பராமரிப்பதில் தான் மேற்கொண்ட சேவைகளை இத்தகைய பொய்ப் பிரசாரங்களால் மாற்ற முடியாது என்றும் முன்னாள் பஸ்நாயக நிலமேயுமான கெமுனு வலிசுந்தர தெரிவித்தார்.