அலுவலகத்தில் பெண்களுடன் சல்லாபம்; பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட DGP!
இந்தியா கர்நாடகாவில் தனது அலுவலகத்தில் பெண்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து மூத்த பொலிஸ் அதிகாரி பதவியில் இருந்து தூக்கி எறிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் காவல் துறை தலைமை பணிப்பாளர் (DGP) அந்தஸ்துள்ள மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கர்நாடக அரசு இன்று (20) பதவி நீக்கம் செய்தது. இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் டிஜிபி ராமச்சந்திர ராவ் ஆவார்.

டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் நடத்தை
பொது அலுவலகத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் நடத்தை குறித்து அதிகரித்து வரும் சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த சர்ச்சை கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகத்தை எட்டியதும், அவர் திங்களன்று சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற்றார்.
ஒரு நாள் கழித்து, அதாவது இன்று மாநில நிர்வாகம் மூத்த காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது.
சர்ச்சைக்கு மத்தியில், இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க ராமச்சந்திர ராவ் இந்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்ததாகவும் எனினும் சந்திப்பு அவரது இடைநீக்கத்தைத் தடுக்க முடியவில்லை என்று இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.