கரவெட்டி பிரதேச செயலகத்தின் செயற்பாடு தொடர்பில் கொந்தளித்த நபர்!
கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதாசீன செயற்பட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், குறித்த செயலகத்தின் சேவை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்படி வீட்டுத் திட்டம் தொடர்பில் பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்துக்கு, கரவெட்டி பிரதேச செயலகம் உரிய மதிப்பை அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
கடந்த ஆண்டு (28.02.2020) வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக வீடு ஒன்றினை பெற்றுக் கொள்ளல் தொடர்பாக பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து துன்னாலை மிந்திரன் அம்மன் கோயிலடியைச் சேர்ந்த எஸ்.இந்திரராஜா என்பவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
குறித்த கடிதத்தை கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பிரதேச செயலகத்தில் கடமையில் நின்றவர்கள் இந்தக் கடிதத்தை வாங்கி பார்த்து விட்டு, ஒன்றுமே தங்களால் செய்ய முடியாது என்று கைவிரித்து அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். அவரும் குறித்தக் கடிதம் பிரயோசனம் இல்லை என்று நினைத்து வீட்டுக்குள்ளே வைத்து விட்டார்.
ஒரு ஆண்டு கழித்து குறித்தக் கடிதம் கிடைத்த ஏனையவர்களுக்கு வீட்டுத் திட்டம் கிடைத்ததைப் பார்த்ததும் விசனம் அடைந்துள்ளார். வீட்டுத் திட்டம் தனக்கு கிடைக்கிறதோ இல்லையோ இந்த கடிதம் சம்பந்தமாக இதுவரை பரிசீலனை கூட செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வீட்டுத்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலகத்துக்கு அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டும் கரவெட்டி பிரதேச செயலகம் உதாசீனம் செய்துள்ளது.
இதேவேளை, பிரதம அமைச்சின் அலுலகத்தில் இருந்து வந்த கடிதத்துக்கு மதிப்பு வழங்காத கரவெட்டி பிரதேச செயலகம் எப்படி மக்களுக்கு சேவையாற்றவுள்ளது என்று பாதிக்கப்பட்டவர் கேட்டு நிற்கின்றார்.