மசாஜ் நிலையத்திற்குள் நடந்த சம்பவத்தால் அச்சத்தில் பெண் ஊழியர்கள்
கந்தானையில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எனக் கூறியே இந்த கொள்லை சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிசிரிவியும் கொள்ளை
சம்பவத்தின் போது கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த 8 பெண்களையும் அறையொன்றிற்குள் அழைத்துச் சென்று அவர்களிடமிருந்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதோடு கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்திலிருந்த சிசிரிவி கமராவையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், கொள்ளையர்கள் ஐவரும் சிறிய ரக வேனொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.