முல்லைத்தீவில் கண்டி நபர் அடித்துக் கொலை

Sulokshi
Report this article
முல்லைத்தீவு , கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதியில் வாடியில் தங்கியிருந்துள்ளார்கள்.
இருவரும் போதைக்கு அடிமை
குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி , நுவரெலியா பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்த நபரை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.