கண்டி – யாழ்ப்பாணம் மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் துரிதம்!
கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் பரபரப்பான பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் துரிதாமக முன்னெடுக்கப்படுகிறது.
சுமார் 700 மில்லியன் ரூபா செலவில் மஹையாவ சுரங்கப்பாதை அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு விரைவான தீர்வை வழங்கும் நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஏ9 வீதியூடான போக்குவரத்து
மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் அபிவிருத்தித் திட்டம் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுரங்கப்பாதை நிர்மாணம் நிறைவடைந்ததும், ஏ9 வீதியூடான போக்குவரத்து சீரடைவதுடன், பிரதான நகரங்களுக்கிடையிலான இணைப்புத்திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.