கண்டி வெடிகுண்டு மிரட்டல்; சிஐடி விசாரணை
கண்டி மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 23 ஆம் திகதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை
இதனையடுத்து கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசேட சோதனை நடவடிக்கையின் போது கண்டி மாவட்ட செயலகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.