கண்டிக்கு 4 விசேட ரயில் சேவைகள்! வெளியான அறிவிப்பு
கண்டி எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதியை கருதி நான்கு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டிக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையிலும் மீண்டும் கண்டிலிருந்து கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பெரஹராவை திருவிழாவில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பும் பொதுமக்களுக்காக கண்டியிலிருந்து மாத்தளை வரையிலும், கண்டியிலிருந்து நாவலப்பிட்டிய வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.