குப்பை காடான கண்டி ; நோய் கிருமிகள் பரவும் அபாயம்
வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் தற்போது பெரும் குப்பை கூழங்களா நிறைத்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடுதாசிகள் என குப்பைகளாக உள்ளன.
பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்
யாத்திரிகர்கள் பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை வீதியில் விட்டுச் செல்வதால், துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சுகாதார பிரச்சனையாகி நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார்.
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.