பிரசாரத்தில் சைக்கிள் ஓடிய விஜய் ; இணையத்தில் வைரலாகும் பரபரப்பு காட்சிகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்தபோது, திடீரெனப் பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், அங்கிருந்த சைக்கிள் ஒன்றைப் பெற்று அதில் ஏறிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விஜய் சைக்கிளில் செல்வதைக் கண்ட ஆயிரக்கணக்கான இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு உற்சாகமாக முழக்கமிட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இதனால் அவர் பாதியிலேயே சைக்கிளை நிறுத்திவிட்டு, மீண்டும் தனது பிரசார வாகனத்தை நோக்கி ஓடிச் சென்று ஏறினார்.
அவர் ஓடி சென்று பிரசார வாகனத்தில் ஏறும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் மகாதானபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.